பலா!

காதலுக்கு
கண்பார்வை போதுமெனில்
எனக்கு இந்த
கன்னங்கள் போதும் !
முழுதாய் நீ
முள்ளாயிருந்தாலும்
முக்கனிகளில்
ஒன்றாய் நீ
இருப்பதினால்
தடுமாற்றம் தான்
தாக்குதலில்
நீ தவறி விடுவாயோ
என்ற பயம் !
நம்பிக்கையுடன்
நெஞ்சம் நிரம்ப
காத்திருப்பேனே
உன்னை ரசிக்க !
காதல் அரும்ப
அம்பு தொடுப்பேனே
என் வசமாக்க !

Advertisements

யார் தவறு ?

வாழ்வதற்கும் ,
வெல்வதிற்கும்,
வயதிருந்தும் 
விரக்தியில்
விடைபெற்றாள்!
தமிழ் மொழி
வழியே படித்ததுதான்
அவளின் தவறா ?
இல்லை,
தவறான சட்டங்களை
எதிர்த்து குரல் கொடுக்க
மறுக்கும் அரசின் தவறா ?
இல்லை
விதியை நொந்து
வெறுமனே குரல் மட்டுமே
கொடுக்கும் நம் தவறா?
அறிய முயன்றேன் பெண்ணே!
அடிமை உலகில்,
ஆளுமைக்கு அஞ்சத்தான்
வேண்டும் போல,
ஆதங்கத்திற்கு பஞ்சமில்லை
என்றாலும் !

விண்ணிலாவது
நிம்மதியாய் உறங்கடி
வசைபாட சமூகமிருக்காது!

– ப்ரியா சக்திவேல்

வலி!

நிவாரணத்தில்
நீங்கி விடா துயரம் !
நித்திரையில்
நீங்கி விடா மௌனம் !
நிஜத்தில்
நீங்கி விடா நினைவு !
நிகரற்ற உறவு,
நிலைக்காத உயிர் !
நிலையான வலி
நொடி தோறும் ரணமே !

–      ப்ரியா சக்திவேல்

ஆசிபா!

RAPE ,SEX, MURDER, – அர்த்தம் தெரியாத காலங்கள் போய் , இப்போ இதெல்லாம் ரொம்ப சாதாரணமாகிவிட்டது நம் நாட்டில். அன்றாடம் ஒரு செய்தி, அதுவும் பிஞ்சு குழந்தைகளையும் இதற்கு பலி கொடுக்கும் போது தான் கஷ்டமாகிறது.
இந்த குழந்தை ஆண்களை கவர்கின்ற மாதிரி உடுத்தினாளா? இல்லை! அவள் குஜ்ஜார் சமூகத்தில் பிறந்தது மட்டுமே காரணம். அந்த மக்கள் அன்றாட பிழைப்புக்காக நிலத்தை,தண்ணீரை பயன்படுத்தினாங்க னா, அதுக்கு போராட்டம் பண்ணுங்க, கோர்ட் ல கேஸ் போடுங்க இல்ல போய் சாவுங்க ஏன்டா இப்டி பண்றீங்க? வெக்கமே இல்லாம தண்டனை கொடுத்தோம்ன்றீங்க இந்த கொடூரமான செயல் பண்ணிட்டு!

மத வெறி,
இன வெறி,
மனித இனத்தையே
கொல்கிறது
இரக்கம் இல்லாமல் !
மாற்றத்தை
எதிர்பார்ப்பது
நேர விரயமே!
மனித இனம்
மாறாது ?
மரத்து போன
இதயங்கொண்டு
மாறடிக்கிறார்கள்
காவிக்கும் ,
பகட்டுக்கும்,
பதவிக்கும் !
-ப்ரியா சக்திவேல்

Everytime I hear news about the deaths in a horrendous manner especially that involves kids too makes me to realize once again that we are no longer Human as we have been losing that Humane nature that was given to us.

We spoilt the Earth! Nature ! Animals! Now Humans in the name of all kind of shits in the world..

காவு!

காலம் தாழ்த்திய பின்
காரணங்கள் எதற்கு ?
மீத்தேன் , 
நியூட்ரினோ
ஸ்டெர்லைட்,
எல்லாம் போதாதென்று
காவெரியையும் காவு
கொடுத்தாயிற்று !
இங்கு வந்து
நீலிக்கண்ணீர் மட்டும் எதற்கு ?
கஷ்டப்படும் மக்களின்/விவசாயிகளின்
கண்ணீர் போராட்டம் ,
கரிசனமற்ற குனியும்
கூட்டத்திற்கு தெரியாது !
கடைசியில் வாய்க்கரிசி க்கும்
காசை போட்டுக்கொள்வார்கள் போல !
ஆச்சர்ய படுவதிற்கில்லை !

கருகிய கனவுகள் !

The everyday news makes me have a strong opinion on this life which is becoming very uncertain. Yes, there comes a fate game too but still when you go out to pursue your dreams but end up dying in a horrifying manner due to negligence. What or Whom to trust?  May the innocent souls rest in peace.

காரணிகள்
பல கூறலாம்,
பேட்டிக்காக !
ஒரு வாரமாக
எரியும் நெருப்பை 
கட்டுக்குள் வைக்காதவர்களை,
பழி சொல்வதா?
எரிவது தெரிந்தும்
அனுமதித்தவர்களை,
பழி சொல்வதா?
பழியை கூட
ஏற்றுக்கொள்ள
மாட்டாதவர்கள்,
கடைசியில்
பாதிக்கப்பட்டவர்களின் மேல்
பழியையும் சொல்லிவிடுவார்கள் !
என்ன அரசோ !
என்ன சட்டங்களோ !
எங்கே தான் மனிதநேயமோ !

பழி கூறுவதினால்,
காயப்பட்டவர்களின்,
வலி ஆறுமா?
கருகிய உயிர்கள் தான்,
திரும்பி வருமா?
– ப்ரியா சக்திவேல்

 

விலை

Life is granted to us by the God to live in Peace but not in this chaos full of Religion, Caste, Regime Issue and what not.  We always take a grant of everything that is why we started suffering even for water. I sincerely wish why can’t the world end now only instead of us sitting and watching everyone including babies going through all these horrific things which we cannot even imagine only. 

ஒரு வாய்
சோற்றுக்காக
ஒரு கொலை,
சமூகப்பாகுபாட்டின்
விலை,
அப்பாவியின் மரணம் !

ஒரு ஆட்சிக்காக
லட்சக்கணக்கான
கொலைகள்,
அடங்கா வெறியின்
விலை,
அப்பாவிகளின் மரணம் !

ஒரு நிலத்துக்காக
சிறு குழந்தையை
கற்பழிப்பு !
ஆணவ ஜாதியின்
விலை,
அடங்கும் மக்களின் மரணம் !

பேராசையில்
மூழ்கிக்கிடக்கும்
நமக்கு என்றேனும்
இவ்வாறு நடந்தாலே ஒழிய,
நாம் திருந்த வாய்ப்பில்லை !
இல்லை இல்லை
அன்றும் மாட்டோம் !
ஏனென்றால்
நாம் ஒன்று சேர்ந்து போராட
நம் ஆங்கிலேயர்களிடம்
அடிமையாக இல்லையே !

ப்ரியா சக்திவேல்

Live.Love.Forgive.Laugh

Picture credits: 

Madhu : http://www.firstpost.com

Syria: http://www.dailymail.co.uk

Villupuram: http://www.thenewsminute.com