அவன் காதல்!

அந்த நிலவின்
வானில் வருவது
என்றும் மாறாது
அது போல்
அவள் நினைவும் ,
பகுத்தறிவற்ற பலரால்
அவள் எண்ணங்கள்
மாறி விலகினாலும் ,
அவள் மேலிருக்கும்
பாரபட்சமற்ற பரிவும்,
அவனின் காதலும்,
என்றும் மாறாது!
காலப் போக்கில்
அழிய அவன் காதல்,
கரையான் அல்லவே !
அவன் உரமானாலும்
அவள் என்றும் வரமே!

அம்மா!

அம்மா – My Best friend/Forever lover.

சுயநலமில்லா
                  காதலியே,
சிந்தனையை
                 நிஜமாக்கும் அன்பே,
சிரமத்தை
                 சிதறவைக்கும் நினைவே,
சரிவை
                 தாங்கும் தாரகையே,
உணர்வுகளை
                 உரித்தாக்கும் உயிரே ,
அடைமொழிகள் பல உண்டு உங்களுக்கு
ஆனால் எங்கள் அன்பு மட்டும் ஒன்று!
அது உங்களுக்கு மட்டும் தான் – அம்மா !