மறுபடியும்!

சில நேரங்களில் நம் மூளை செயல் இழந்தது போல் ஆகிவிடும் காரணம் அறிய முயற்சித்தாலும் நமக்கு தெரியும் அது நிஜத்தில் நடந்தால் ஒழிய மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ண அலைகளை தவிர்க்க இயலாது.
எப்படியோ மறுபடியும் என்ற தலைப்பிற்கேட்ப நான் எழுத yourquote இல் ஒரு challenge போட்ருந்தாங்க அதுக்கேற்றாற்போல் எழுதிய ஒரு தொகுப்பு இங்கே உங்களுக்காக.
தினம் தினம் எட்டி பார்ப்பேன் எவ்வளவு பேர் நம்ம பக்கத்துக்கு வராங்கனு அந்த ஒன்று இரண்டு நம்பர் பாக்கறப்போ கிடைக்கிற ஆனந்தம் வேறு எதுவும் எனக்கு இல்ல .

நன்றி என் சிரிப்பிற்கு காரணம் கொடுப்பவர்களுக்கு !

Once_and_Again_logo.jpg
மீதமிருக்கும்
நாட்களை,
விரக்தியிலிருந்து
மீட்டெடுக்க
வருவாயா,
காதலித்த
அதே உணர்வுடன் ?
காத்திருப்பில்
களங்கமில்லை
எனினும்
சுற்றம் தவிர்க்க
இயலா கோழையாய்
நீ இன்றும் !
கனவிலாவது
நடந்தேறாதென்று
சூழ்நிலைக்கைதியாய்
நான் இன்றும் !

உதாஸீனம்

உதாஸீனம்,
ஒரு கொடிய நோய் !

உதாஸீனம்,
ஒரு கொடிய நோய் !
துடிப்புள்ள வரை
திமிராயிருக்கும் !
தவிக்க விட்டு
பிரிந்தபின்பு தெரியும்,
தனிமைக் கடல்
புயலாய் சீறி
துன்புறுத்தும்
தொலைந்த மனிதர்களோடு
கடந்த பாதைகளை !
திளைத்த நிஜங்களை !
தவறவிட்ட வாய்ப்புக்களை !
தவிக்கவிட்ட நொடிகளை !
அலையவிட்ட இளமையை!
அலறவிட்ட அகங்காரத்தை !

வாழ்க்கை ஒருமுறை.
நம்பிக்கை துரோகியை தவிர
பழகிய மனிதர்களை
பார்க்கும் பொழுது
பேசும் பொழுது
சகஜமாய் பேசுமளவிற்கு
நட்பு பாராட்டினால் போதும் !
மறுமுறை பார்ப்போமா
யாரும் அறியோம் !
மிரட்டும் நிமிடங்களை
சந்திக்கும் நபர்களை
மதிப்போம் நம் குணத்தால் !