அம்மாவின் கைவண்ணம் !

அம்மாவின்-முயற்சி

அம்மா கற்று கொண்டதோ அவர்கள் பத்தாவது படிக்கும் போது , தோராயிரமாக 25 வருடத்திற்கும் மேலாகிவிட்டது.
இருந்தாலும் இன்று அந்த படிப்பு தான் அவர்களை சுயமாக சம்பாதனை யாகியுள்ளது. எங்கள் பக்கத்து வீட்டில் நாத்தனாம்மா என்றொருவர் இருக்கிறார். என் அப்பா சிறு வயதிலிருந்து அவர் எங்கள் வீட்டுணருகில் தான் வாழ்கிறார். முதலில் கணவனோடு இன்று தனியாக. அவரை பற்றி கூற பல கதைகள் உண்டு அது இன்னொரு நாள் கண்டிப்பாக பதிவிட விரும்புகிறேன்.  🙂 ஏனென்றால் அவரது வாழ்க்கை கதை திறந்த புத்தகமே ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளவும் மனம் வேண்டுமல்லவா?

சரியாக ஒரு வருடத்திற்கு முன் , அவர் வேலைக்கு செல்ல என் அம்மாவிடம் கூடை பின்னி கொடு திலகா (என் அம்மா வின் பெயர்) என்று கூற அம்மாவும் சேரி என்று நல்ல அழகான கூடை பின்னி கொடுத்தார். அதை அவர் வேலைக்கு எடுத்து செல்ல, சிலர் பார்த்து எனக்கும் வேணும் என்று கூற இப்படி ஆரம்பித்தது தான் என் அம்மா வின் பொழுது போக்கு சுய சம்பாத்தியம்.சிறு வரவு தான் , எனினும் இவ்வளவு வருடங்கள் வீடு வேலைகள் மட்டுமே உலகம் என்று இருந்த என் அம்மா விற்கு இது ஒரு புத்துணர்ச்சி வேலையாகி விட்டது.

எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் அம்மா வின் வித்யாசமான கலர் காம்பினேஷன் சேர்த்து வித விதமாய் அழகாய் கூடை தான்.

அம்மாவின் அர்ப்பணிப்பு ,சுத்தமான வேலை மிகவும் பிடித்த விஷயங்கள் .இப்படி நிறைய சொல்லலாம் ஏனென்றால் என்னிடம் அது எதுவுமில்லை என்பதை பெருமையுடன் பதிவிடுகிறேன்.( கண்டிப்பா இத படிச்சாங்கன்னா என்ன திட்ட தான் செய்வாங்க அப்படியாவது மாறுவேனான்னு ).

அம்மா யாராவது வேண்டுமென்றால் பின்னி கொடுப்பார்கள் இது வரை நூற்றுக்கணக்கான கூடை பின்னியிருப்பார்கள். பக்கத்துக்கு வீட்டு செல்வி அக்கா வும் தான் அம்மா வுடன் சேர்ந்து போடுவார்கள், கதை பேசிக்கொண்டே , தாயக்கரம் ஆடிக்கொண்டே , .

விடுமுறைக்கு செல்லும் போது அம்மா தான் படைப்புக்களை பெருமிதத்துடன் கடும் போது அவரின் சின்ன சிரிப்பு மற்றும் எந்நாளும் சுயமாய் இருக்க முடியும் என்ற கர்வம். இதுவே பெண்மையின் ஆனந்தம் மற்றும் சிறப்பு.

சரி விஷயத்திற்கு வருவோம், முன்பு தோன்றவில்லை சோசியல் நெட்ஒர்க் இல்  (Social Network ) போடலாமென்ற எண்ணம். ஆனால் கடந்த மாதம் உதித்த எண்ணம் கொண்டு அவரின் பெயரில் இன்ஸ்டாகிராம் -இல் (Instagram)  திலகா ஒர்க்ஸ்  (thilagaworks) என்று பக்கம் திறந்திருக்கிறேன். இது இலவச விளம்பரம் மட்டுமில்லாமல் கைத்தொழில் எவ்வளவு பின்னடைந்திருக்கிறது மற்றும் நம் உபயோகிக்கும் சாக்கு பையனாலும் சரி பிளாஸ்டிக் பையனாலும் சரி ஆயுள் கம்மி இதற்கு அப்படி இல்லை. வருடங்கள் பல தாங்கும்.
எங்கள் ஊரில் சந்தை வாராவாரம் புதன் அன்று இந்த கூடைகள் ராஜ்யம் மக்களின் கையில் , அனைத்தையும் சமக்க  வேண்டுமல்லவா?

To visit my mom’s Page:

https://www.instagram.com/thilagaworks/

என் அம்மாவின் கைவண்ணங்களில் சில:

 

 

If any inquiries or pricing details , Do send an email to sshana17@gmail.com

 

அம்மா!

அம்மா – My Best friend/Forever lover.

சுயநலமில்லா
                  காதலியே,
சிந்தனையை
                 நிஜமாக்கும் அன்பே,
சிரமத்தை
                 சிதறவைக்கும் நினைவே,
சரிவை
                 தாங்கும் தாரகையே,
உணர்வுகளை
                 உரித்தாக்கும் உயிரே ,
அடைமொழிகள் பல உண்டு உங்களுக்கு
ஆனால் எங்கள் அன்பு மட்டும் ஒன்று!
அது உங்களுக்கு மட்டும் தான் – அம்மா !